பாரியவிபத்து சம்பவம் : கார் முற்றாக சேதம் - பரந்தன்
பரந்தன் உமையாள்புரத்தில் 11.09.2017 இரவு பி.ப 10.30 மணிக்கு வீதியின் அருகாமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிபயணித்துக்கொண்டிருந்த பேரூந்து மோதியதால் பாரியவிபத்து சம்பவம் இடம்பெற்றது
இதில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் முற்றாக சேதமடைந்ததுடன் பேரூந்தின் முன் முகப்பில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது .
குறித்த இந்த விபத்து தொடர்பில் மக்கள் பேரூந்தின் மீதே முழுமையாக தவறு என தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுவருகின்றது.

No comments