இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் துரோகத்தை தமிழக மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்?

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு யாரும் தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறமுடியும்.


ஏன் இந்த நிலை? தமிழன் பெருந்தன்மையை பலவீனமாக நினைக்கிறார்களா?
முன்பு சோ தமிழ்நாட்டில் இருந்துகொண்டு மரணத்தின் இறுதி வரையிலும் தமிழர் நலனுக்கு விரோதமாக செயற்பட்டார்.
இப்போது ; குருமூர்த்தி தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர் நலனுக்கு எதிராக பேசி வருகிறார்.
இதே குருமூர்த்தி சங்கராச்சரியாரின் கொலை வழக்கில் அவருக்காக ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் பொலிசாரால் தேடப்பட்டவர்.
மும்பையில் சென்று ஒளிந்து இருந்தவர் தற்போது தமிழகம் வந்து வெளிப்படையாகவே தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு மாணவர்கள் தமிழகம் எங்கும் போராடி வருகிறார்கள்.
ஆனால் குருமூர்த்தியோ தனது  இதழில் மாணவியின் மரணத்தை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள் என்று மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்.
அதேபோல் எஸ்.வி.சேகரும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
இவர்கள இருப்பது தமிழ்நாட்டில். இவர்கள் உழைப்பது தமிழை வைத்து. ஆனால் தமிழர்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவார்கள்.
இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் துரோகத்தை தமிழக மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்?

No comments

Theme images by mammuth. Powered by Blogger.