பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட இறுக்கம்! ஐரோப்பாவாக மாறிய கட்டுநாயக்க
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இதற்கு விதிவிலக்கல்ல, இந்த இணையத்தளத்தின் ஊடாக முழுமையான அல்லது மோசடியான ஆவணங்களைக் கொண்ட பயணிகள் கடந்து செல்ல பல முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையின் தேசிய விமான நிறுவனமான, ஸ்ரீலங்கன் விமான சேவை, சமீப காலங்களாக கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான பயணத்தைத் தடுக்கும் முயற்சிகளில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதாக, அதில் சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசாக்களை பயன்படுத்தி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் பல பயணிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் வழங்கிய பயிற்சி மூலம், தேசிய பொலிஸாருக்கும், பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் குறிப்பாக ஆவணங்களை சரிபார்ப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மனித கடத்தலில் ஈடுபடும் மோசடி கும்பல்களின் முயற்சிகளை முறியடிப்பதற்கு புலம்பெயர்ந்தோர், சுங்க பிரிவினர், விமான நிலையம் , விமான சேவைகள் மற்றும் இலங்கை விமானப்படை உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களும் பண்டாரநாயக்க விமான நிலையத்துடன் இணைந்து செயற்படுகின்றது.
சமீபத்திய வாரங்களில் தனியாக பண்டாநாயக்க விமான நிலையத்தின் ஊடாக போலி கடவுச்சீட்டுகளுடன் பயணிக்க முயன்ற ஐந்து நபர்களை ஸ்ரீலங்கன் ஊழியர் கண்டுபிடித்தனர்.
மனித கடத்தல் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்களுக்கு கடுமையான சவாலாக உள்ளது.
அத்தகைய நபர்கள் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு வந்த பின்னர் கண்டுபிடிக்கும்போது, விமான நிறுவன அதிகாரிகள், குறிப்பாக ஐரோப்பாவில் கடுமையான அபராதங்களை விதிக்கப்படுகின்றது. சில ஐரோப்பிய நாடுகளில் 5,500 யூரோ வரை அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments