சென்னையை மட்டுமல்ல தமிழகத்தையே கலக்கிவிட்டனர் நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளி மாணவிகள்
பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியாமல்
குறிப்பாக அரசின் பல்வேறு உளவு பிரிவுகளுக்கும் தெரியாமல் , 10 , 11 , 12 வது படிக்கும் மாணவிகள் ஒன்றுகூடி சென்னையின் முக்கிய பகுதியில் சாலைமறியல் செய்தனர்
பள்ளிக்கூட மாணவிகள்தானே என்று பலரும் அலட்சியமாக இருந்த நிலையில் பெரும் போலீஸ் பட்டாளமே வந்து அகற்றியபோதும் அத்தனை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் போக்கு காட்டி சாலைமறியலை மத்திய மாநில பிஜேபி அரசின் நீட்டிற்கு எதிராக மூன்றுமணி நேரத்திற்கு மேல் தொடர்ந்தனர்
தங்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் *வேடிக்கை பார்க்கும் தமிழகமே
வீதிக்கு வந்து போராடு* என்ற கோஷத்தை போட்டு பொதுமக்களையும் தங்களுக்கு ஆதரவாக போராட வைத்தனர்
வலுக்கட்டாயமாக போலீசார் குண்டுக்கட்டாக தூக்கியபோதும் ஒன்றுகூடி அத்தனை எதிர்ப்பையும் சமாளித்தனர்
அரசிடம் உங்களின் உணர்வுகளை தெரிவிக்கின்றோம் என்ற உயர் அதிகாரிகளின் உத்தரவை அடுத்து சாலைமறியலை கைவிட்டு பள்ளிவளாகத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்
அப்போராட்டத்தில் போராடிய மாணவிகளுக்கு TC கொடுத்துவிடுவோம் பரீட்சை எழுதவிடமாட்டோம் என்று கூறிய தலைமை ஆசிரியரான *வில்லி*யை கண்டித்தும் எங்களை பரீட்சை எழுத அனுமதிக்கவேண்டும் , எங்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உறுதியை கல்வி உயர் அதிகாரிகள் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் மீண்டும் சாலை மறியலுக்கு செல்வோம் என்றும் மிரட்டினார் ,
இதையடுத்து கல்வி உயர் அதிகாரிகள் நேரடியாக வந்து மாணவிகளின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் கொடுத்தனர்
இதையடுத்து மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ள போலீசார் அம்மாணவர்களை விடுவிக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் சாலைமறியல் செய்வோம் என்று கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்
வெறும் 50 அல்லது 60 மாணவிகள் ஒன்றுகூடி தமிழகத்தையே திரும்ப பார்க்க வைத்துவிட்டனர்
பள்ளிக்கூடம் படிக்கும் போதே இவ்வளவு போராட்ட குணமா ! இவ்வளவு உறுதியா !! என்று பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தி விட்டனர்
மாணவிகள் போராட்டத்தின் நோக்கம்
சாதாரண அரசு பள்ளிக்கூடத்தில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இறந்த மாணவி அனிதாவின் நிலை இனி எங்களுக்கும் எங்களை போன்ற சாதாரண மாணவிகளுக்கும் இனி ஏற்பட கூடாது என்பதே
அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைமறியல் போராட்டம் முறை தவறு என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் தமிழக மாணவ மாணவிகளின் வாழ்க்கையே மத்திய பிஜேபி அரசின் இந்த நீட் தேர்வால் நாசமாகும்போது உச்சகட்ட கோபத்தால் இப்படி போராட்டம் செய்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் .


No comments