ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் நிறைவு

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் வேலை நிறுத்தப்பபோராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து ஆராய ஜனாதிபாதியினால் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவிலிருந்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது.

கடந்த 7 நாட்களாக இந்த வேலை நிறுத்தப்போராட்டம் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.இன்றைய தினம் வேலைக்கு வருகை தராதவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
Theme images by mammuth. Powered by Blogger.