வித்தியாசமான முறையில் பிறந்த நாளினைக் கொண்டாட முயன்ற இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான முறையில் பிறந்த நாளினைக் கொண்டாட முயன்ற இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து தெரியவருவதாவது, குறித்த இளைஞர்கள் வீதியை இடைமறித்து நடுவீதியில் தமது உந்துருளி ஒன்றினை குறுக்கு நிலையில் வைத்துள்ளனர். பின்னர் அதன் ஆசனத்தில் குதப்பி (கேக்) ஒன்றினை வைத்து கூர்மையான கத்தி ஒன்றினால் வெட்ட முயற்சித்துள்ளனர்.
இதன்போது குறித்த வழியால் வந்த கோப்பாய் பொலிஸார் சம்மந்தபட்ட இளைஞர்களை விசாரித்ததுடன் பொதுமக்களுக்கு இடைஞ்சலினை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வெறும் பதினேழு மற்றும் பதினெட்டு வயதினை உடையவர்கள் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கூர்மையான கத்தியினை வைத்திருந்ததனால் வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
