உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22ம் திகதி ஆரம்பம்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

இதற்கமைவாக 22ம் திகதி மாவட்ட செயலக அதிகாரிகள் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

அரச நிறுவனங்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் 25ம் திகதி தபால்மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும்.

26ம் திகதி பொலிசார் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த தினங்களில் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் பெப்ரவரி மாதம் 1ஆம் ,2ஆம் திகதிகளில் இதற்கென விசேட தினமாக மீண்டும் வாக்களிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் குறிப்பிட்டார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.