வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப் சாட் வசதியில் பிழை இருப்பதாக தெரிவிப்பு

ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப் சாட் வசதியில் பிழை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற க்ரிப்டோ பாதுகாப்பு மாநாட்டில் வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாட்ஸ்அப் செயலியின் குரூப் சாட்களில் குரூப் அட்மின் உத்தரவின்றி மற்ற நபர்களை சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

அதன்படி வாட்ஸ்அப் சர்வர்களை இயக்கும் வசதி கொண்டவர்கள், வாட்ஸ்அப் குரூப்களில் அட்மின் உத்தரவின்றி நேரடியாக மற்றவர்களை சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் குரூப்களில் பகிர்ந்து கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் அட்மின் உத்தரவின்றி சேர்க்கப்படும் புதிய நபரால் பார்க்க முடியும்.

குரூப்களில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய நபர் மற்றவர்களுக்கு குரூப் அட்மின் மூலம் சேர்க்கப்பட்டதாகவே தெரியும்.

இதுகுறித்து வாட்ஸ்அப் தலைமை பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் ஸ்டமோஸ் தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறியதாவது:-

வாட்ஸ்அப் குறித்து வையர்டு எழுதியிருக்கும் செய்தியை படியுங்கள். வாட்ஸ்அப் குரூப் சாட்களை ரகசியமாக யாராலும் இயக்க முடியாது. குரூப் சாட்களில் புதிய நபர் சேர்க்கப்படும் போது குரூப் சாட் செய்யும் அனைவருக்கும் அறிவிப்பு செய்தி அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.