மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி மீளப்பெறப்பட்டது

மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.

மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிப்பு, மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வது தொடர்பிலும் மதுபானசாலைகளில் பெண்கள் கடமைாயற்றுவது தொடர்பிலும் கடந்தவாரம் வர்த்தமானியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மதுபான சாலைகளை முற்பகல் 08 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கியும், பெண்களுக்கு மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பாகவும் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, இந்த புதிய சட்ட திருத்தத்தை இரத்து செய்வதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்பிரகாரம், இந்த இரண்டு சட்ட திருத்தங்களையும் இன்று மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.