மனித உடம்பில் புதிய உறுப்பை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானி

நமது உடல் உறுப்புகளில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை ஐயர்லாந்து விஞ்ஞானி ஜே கால்வின் கோஃவி கண்டுபிடித்துள்ளார்.


கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்கள் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமான வயிற்றுப்பகுதியில் உள்ள சிறுகுடலின் சவ்வு பகுதிகள், பல பகுதிகள் சேர்ந்து உருவாகியுள்ளதாகவும், இணைக்கப்பட்ட சவ்வு பகுதிகளாகவும் கருதப்பட்டு அதற்கேற்றவாறு வயிறு மற்றும் சிறுகுடல் தொடர்பான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஐயர்லாந்து நாட்டின் லிமரிக் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜே கால்வின் கோஃவின் ஆராய்ச்சியில் சிறுகுடலின் அங்கபகுதிகள் ஒரே சவ்வால் உருவானவை என்றும் அவை பல பகுதிகள் சேர்ந்து ஒரு அங்கமாக உருவாகியுள்ளது என்ற மருத்துவ கூற்று தரவானது என்றும் கண்டறிந்துள்ளார்.

பல கட்ட ஆய்வுகளில் பல பகுதிகள் சேர்ந்து உருவாகியுள்ளதாக கருதப்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் சிறுகுடலின் சவ்வு செயல்கள், ஒரு அங்கமாக கருதி தரப்பட்ட சிகிச்சைகளிலும் இரு வேறு முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் கால்வின் கோஃவின் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகுடல் சவ்வு தொடர்பான சிச்சை முறையில் இனி மாற்றம் ஏற்படும் என ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Theme images by mammuth. Powered by Blogger.