வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுக்கும் அறிவித்தல்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுக்கும் அறிவித்தல்
அன்பான பட்டதாரிகளே!
வட மாகாண கல்வியமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான அழுத்தம் எம்மால் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வியமைச்சில் காணப்படுகின்ற ஆரம்ப கல்வி வெற்றிடத்தை நிரப்புவதற்கு மாகாண சபையானது நியதிச் சட்டமொன்றை உருவாக்குதல் வேண்டும். ஆரம்ப கல்வியிலுள்ள 1000 கும் அதிகமான வெற்றிடத்தை பெறுவதோடு ஏனைய ஆசிரியர் ,சமுர்த்தி, அபிவிருத்தி,விவசாய,தகவல் தொடர்பு உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களில் வேலையற்ற பட்டதாரிகளை நிரப்புவதற்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.
இன்று காலை 9 மணிக்கு மிக முக்கியமான கலந்துரையாடல் மாவட்ட செயலகம் முன் உள்ள எமது போராட்டக் களத்தில் நிகழவுள்ளதால் அனைவரையும் வருமாறு அழைக்கிறோம்.
இக் கலந்துரையாடலில் கடந்த கிழமை நடைபெற்ற கொழும்புக் கலந்துரையாடல் பற்றியும் குறிப்பிடபடவுள்ளது.
எமது வேலைவாய்ப்பு தொடர்பான அரசின் நிலை என்ன? எனவும் பிரமுகர் ஒருவர் குறிப்பிடவுள்ளார்.
மாகாண , மத்திய அரசிடம் விரைவாக நியமனங்களை பெற இணையுங்கள்.


