பாடசாலை மஞ்சள் கடவையில் இரு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்
மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையில் முறக்கொட்டான்சேனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பாடசாலை மஞ்சள் கடவையில் இரு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை 22.06.2017 காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்குச் (CTB) சொந்தமான இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸும் மட்டக்களப்பு தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிஸ்ட்ட வசமாக அந்நேரம் வீதியைக் கடந்து கொண்டிருந்த மாணவர்கள் வீதியருகில் பாய்ந்து விலகிச் சென்று ஆபத்திலிருந்து தப்பிக் கொண்டுள்ளனர்.
