கதிராமங்கலத்தில் காவல்த்துறை கொடூரம் ... போர்களம்.... தடுத்திட தமிழகமே வீதிக்கு வா ...
தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து எரிக்கிறது ஆரிய இந்தியா!!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பூமியிலே தற்பொழுது மீத்தேன் எரிக்காற்று எடுத்து பாலைவனமாக மாற்றி வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று இனப்பகை இந்தியாவின் ONGC நிறுவனம் கதிராமங்கலம் பகுதியில் இருந்து மீத்தேன் எரிக்காற்று எடுத்துச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு "தீ" பற்றி எரிகிறது
எனவேக் காலத்தின் அருமைக் கருதி அழிவின் விளிம்பில் உள்ள தமிழகத்தைக் காக்க போராட வீதிக்கு வாருங்கள் தமிழர்களே!!.
"நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் தவணை முறையில் தமிழ்நாடும், தமிழினமும் அழியும்!!!"
கதிராமங்கலத்தில் அறவழியில் போராடிய மக்கள் போராட்டத்தை சீர்குலைக்க காவல்துறையினர் திட்டமிட்டு தடியடி நடத்தி தாக்குதல் ...
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் ஐயா உட்பட 10 ஆண்களையும் 4 பெண்களையும் கைது செய்து தற்போது பந்தநல்லூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
கதிராமங்கலத்தில் காவல்த்துறையே திட்டமிட்டு தீ வைத்து கலவரத்தை உண்டு பண்ணியதாக மக்கள் தகவல் ...
எங்கே தலைவர்கள் ...??
அங்கே எல்லா சாதியும் தானே அடிபடுகிறது. எங்கே சாதி தலைவர்கள் ..??
அங்கே எல்லா மதத்தவர்களும் தானே மிதிபடுகிறார்கள். எங்கே இந்துதுவா தலைவர்கள் ,தவ்கித் தலைவர்கள்..??
அங்கே பாட்டாளி வர்க்கம் தானே பாடுபடுகிறது.. எங்கே கதிர் அரிவாளை சின்னமாக வைத்துள்ள கம்யூனிஸ்ட்கள்..??
அங்கே அதிமுக ,திமுகவிற்கு ஓட்டுப்போட்டவன் தானே ஓடுகிறான்..எங்கே ஓட்டுக்கு பணம் கொடுத்த திராவிட தலைமைகள்..??
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் தமிழர் களத்தில் நிற்கும்..!!
ஏனனில் தாக்கப்படுவது தமிழர்கள்.!!
