நம்பமுடிகிறதா ?.... 13 பேரை மட்­டுமே சனத்­தொ­கை­யாகக் கொண்ட நாடு -

அமெ­ரிக்­கா­வி­ல் 13 பேரை மட்­டுமே சனத்­தொ­கை­யாகக் கொண்ட சிறிய பிராந்­தி­ய­மான மொலோ­ஸி­யா­வா­னது தன்னை ஒரு தனி நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்டு தனக்­கென சொந்த நாணயம் , சட்­டங்கள், கட­வுச்­சீட்டு மற்றும் அடை­யாளம் என்­ப­வற்றை உள்­ள­டக்கி செயற்­பட்டு வரு­கி­றது.
தனி­நா­டாக தன்னைத் தானே சுய பிர­க­டனம் செய்து கொண்­டுள்ள அந்­நாட்டின் 40 ஆவது ஆண்டு விழா அண்­மையில் கொண்­டா­டப்­பட்­டது.
மேற்­படி பிராந்­தி­யத்தை அமெ­ரிக்காவும் ஏனைய நாடுகளும் ஒரு நாடாக
அங்­கீ­க­ரிக்­காத போதும் அந்தப் பிராந்­திய மக்கள் அதைப்பற்றி சிறிதும் கவலைப் படாமல் தமது பிராந்தியத்தை இறை மையுள்ள தனிநாடாகவே கருதுகின்றனர்.
அந்தப் பிராந்தியத்தை தனிநாடாக சுய பிரகடனம் செய்த அதன் ஆட்சியாளரான கெவின் போக் (54 வயது), தான் சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவராக விளங்குவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
சுய நாடாக பிரகடனம் செய்து கொண்ட போதும் மேற்படி பிராந்தியம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்துக்கு வரி செலுத்தி வருகிறது. அந்த வரியை மொலோஸியா மக்கள் தம்மால் வழங்கப்படும் வெளிநாட்டு உதவியொன்றாகவே கருதுகின்றனர்.



Theme images by mammuth. Powered by Blogger.