3000 டன் உணவுப் பொருட்களுடன் துருக்கியின் கப்பல் கத்தாரில்

3000 டன் உணவுப் பொருட்களுடன் துருக்கியின் கப்பல் கத்தார் துறைமுகத்தை வந்தடைந்தது!


துருக்கியின் இஸ்மிர் துறைமுகத்திலிருந்து, கத்தாரின் ஹமத் துறைமுகத்துக்கு குளிரூட்டப்பட்ட ”The Green Guatemala” என்ற விமானத்தின் மூலம் 3000 டன் உணவுப் பொருட்கள் வந்தடைந்துள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியிலிருந்து கத்தாருக்கு கடல் வழியாக உணவைக் கொண்டுவந்த முதல் கப்பல் இதுவாகும். 
இந்தக் கப்பலின் வழியாக உலர் உணவுப் பொருட்கள், பழங்கள், மற்றும் காய்கறிகள் உட்பட இன்னும் பல பொருட்கள் கத்தாரை வந்தடைந்துள்ளன. துருக்கி ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் உணவுப் பொருட்கள் உட்பட பல அத்திய அவசியப் பொருட்களை வழங்கி வந்தது. தற்போது தான் முதன் முதலாக சரக்குக் கப்பல் கத்தாரின் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மேலும் எதிர் வரும் சில தினங்களில் மற்றுமொரு சரக்குக் கப்பல் கத்தாரின் துறைமுகத்துக்கு வந்து சேரும் என்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் 5ம் திகதி சவூதி, துபாய், எகிப்து மற்றும் பஹ்ரைன் கத்தாருடனான உறவுகளைத் துண்டித்ததோடு தரை மற்றும் வான் வழி தொடர்புகளையும் நிறுத்திக் கொண்டன. இதனால் மேற்படி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்களும் நின்று போனது.
இந்நிகழ்வின் பின்னர் கத்தாருக்கு முதன் முதலில் உணவுப் பொருட்களை வழங்கிய நாடுகள் தான் துருக்கி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கத்தார் எந்த ஒரு பொருட்களுக்கு தடை ஏற்படாத வகையில் துருக்கிக்கு பார்த்துக் கொள்ளும் என கத்தாருக்கான தூதுவர் அறிவித்துள்ளதோடு 2022ம் ஆண்டு நடக்கவுள்ள கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து செயற்றிட்டங்களுக்கான கட்டட பொருட்களை விநியோகிக்கும் என்பதாக அறிவித்துள்ளார்.
Theme images by mammuth. Powered by Blogger.