துருக்கியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி.. 6 பேர் வரை பலி. பலர் பாதிப்பு.
துருக்கியில் 6.7 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் எழுந்துள்ளது.
துருக்கி கடற்பகுதியில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியுள்ளது. இதனால் 6 பேர் வரை பலியாகி . பலர் பாதிப்படைந்து இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை ஒட்டியுள்ள பெருவாரியான ஹொட்டல்களில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பு காரணம் சுற்றுலாப்பயணிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹொட்டல்களின் சுவர்களில் நிலநடுக்கத்தால் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடற்கரையில் தூக்கத்தில் இருந்த சுற்றுலாபயணிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
நில அதிர்வுகள் மீண்டும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சுற்றுலாப்பயணிகளை ஹொட்டலுக்குள் செல்ல வேண்டாம் என நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
2 மணி நேரத்தில் குறித்த பகுதியில் 5 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக குறப்படுகிறது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை
