தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பு நிலையத்தின் செயலமர்வு
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பு நிலையத்தின் எற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் அரசியல் ரீதியாக பிரதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் பிரதிகளுக்கு வரயிருக்கும் தேர்தல் முறைகள் பற்றி தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று நேற்று யாழ் கீறின் கீறாஸ் ஹோட்டலில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர் ஆர்.மஞ்சுள அபய நாயக்கா தலைமையில் இவ் செயலமர்வு இடம்பெற்றது..
புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கு உள்ளுராட்சித் தேர்தலில் மூலமாக தேர்தல் பிரச்சார நிதியினை வலியூறுத்தல் மற்றும் சொத்துக்கள் பொறுப்புகள் பிரகடனம் தொடர்பான அரசியல் ரீதியான பின்பற்றுதல்கள் என்னும் தொனிப்பொருளில் செயலமர்வும் இடம்பெற்றன.
கருத்து தெரிவிக்கையில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர் ஆர்.மஞ்சுள அபய நாயக்கா தற்போதைய காலத்தில் புதிய அரசியல் ரீதியாக மாற்றத்திற்கு பெண்களின் அரசியல் கொள்கைப்பிரமானம் முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது. இதனை நாங்கள் எதிர்பார்த்து இருக்கின்றோம். எதிர்வரும் ஊள்ளுராட்சி தேர்தலிகளிலும் பெண்களின் முக்கியத்தும் அவசியம் என்று குறிப்பிட்டார். குறிப்பாக எனைய நாடுகளுக்கு இனங்கலாக இலங்கையும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்றநோக்கில் தற்போதைய காலம் காணப்படுகின்றது. அதற்கு முன்னுதாராணமாக இருந்து செயற்படவேண்டும். குறிப்பாக ஜனாதிபதி அவர்கள் பெண்களின் அரசியல் பெண்கள் உரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்துவருகின்றார் என அவர் தெரிவித்தார்.
இச் செயலமர்வு எதிர்வரும் சித்திரை மாதம் கிழக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வர இருக்கின்ற புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கான வகிபாகம் பிரதேச ஆட்சி முறையில் உள்ளுராட்சி மன்றங்களின் முக்கியத்துவம் மற்றும் பெண்களின் பங்குபற்றலை அதிகரிக்க செய்தல், எதிர்வரும் ஊள்ளுராட்சி தேர்தலின் முக்கியத்துவம், மற்றும் தற்போதை ஆட்சியில் பெண்களுக்கான அரசியலின் முக்கியத்துவம், தகவல் தொழில்நுட்ப யுகத்தின் அரசியலின் கண்ணோட்டம், சர்வதேச நாடுகள், மற்றும் அயல் நாடுகளின் அரசியலின் வகிவாகம், ஊள்ளுராட்சி தேர்தலில் பெண்களில் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடையங்கள் தொடர்பாவும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
