படத்தில்தான் வில்லன், நிஜத்தில் ஹீரோ - தீனா

படத்தில்தான் வில்லன், நிஜத்தில் இவர் தான் ஹீரோ


விஜய் நடித்த ‘தெறி’ உள்பட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் தீனா. இவர் சமீபத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த ‘காதல்’ பட நடிகர் விருச்சிககாந்துக்கு அடைக்கலம் கொடுத்து தற்போது சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத்தர உதவியுள்ளார்.
இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி ஒருவரை காப்பாற்றியுள்ள தகவல் வெளிவந்துள்ளது. ராயபுரத்தை சேர்ந்த தனுஸ்ரீ என்ற ஏழைச் சிறுமிக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தால் தான் உயிர் பிழைக்கும் நிலை இருந்தது. அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்பதால் அந்த சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நேரத்தில் அவர்களுக்கு கைகொடுத்த தீனா, உடனே அந்த சிறுமியின் புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவு செய்து நல்ல உள்ளங்கள் இந்த சிறுமிக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு செவிசாய்த்து திரையுலகினர்களும் மற்றவர்களும் பணத்தை அனுப்பி வைத்தனர்.
அறுவை சிகிச்சை செய்வதற்கும் மேலாக பணம் குவியவே தற்போது அந்த சிறுமி பூரண குணமடைந்து விரைவில் பள்ளிக்கு செல்லவுள்ளார். வில்லனாக திரையில் தோன்றினாலும் தீனா தான் நிஜ ஹீரோ என்று சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Theme images by mammuth. Powered by Blogger.