நெல்லியடிப் பொலிஸார்! 15 நிமிடத்திற்குள் தீர்வு.
யாழ். நெல்லியடி நகர்ப்புறப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திருட்டுப் போன நிலையில் 15 நிமிடத்திற்குள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். வடமராட்சி இரும்பு மதவடியைச் சேர்ந்த நபரொருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையமொன்றுக்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார்ச் சைக்கிளைக் காணாமையால் திகைப்படைந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் நெல்லியடிப் பொலிஸாருக்கு முறையிட்டார்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட நெல்லியடிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் நெல்லியடி நகரில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.
அங்கிருந்த காண்காணிப்புக் கமராக்களும் சோதனையிடப்பட்டன. இதன் காரணமாக குறித்த மோட்டார் சைக்கிளை களவாடிய திருடன் எங்கும் கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நெல்லியடியிலிருந்து வதிரி செல்லும் வீதியில் நிறுத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளார்.
நெல்லியடிப் பொலிஸாரின் விரைவான நடவடிக்கையால் திருட்டுப் போன மோட்டார் சைக்கிள் 15 நிமிடத்தில் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸாரின் செயற்பாட்டைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

No comments