எதிர்பாருங்கள் இனி காரணமின்றி முடிவுறும் BIG BOSS நிகழ்ச்சி : அவர்களது தேவை முடிவடைந்துவிட்டது
எதிர்பாருங்கள் இனி காரணமின்றி முடிவுறும் BIG BOSS நிகழ்ச்சி : அவர்களது தேவை முடிவடைந்துவிட்டது
இந்த நிகழ்ச்சி பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பையும் தாண்டி விஜய் தொலைக்காட்சி மூலம் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்த அளவுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன ?
தமிழ் மக்களது போராட்டங்கள் அனைத்தையும் தவறானதாகவும் , தமிழ் மக்களது இலட்சிய போக்கு தவறானது எனவும் உலகிற்கு எடுத்துக்காட்டுதல்.
இதன் அடிப்படையில் சமூக பிரபலங்கள் என்ற பெயரில் நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அதிகளவு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் யூலி என்ற ஓர் தமிழ் பெண்ணை கலந்துகொள்ள வைத்ததே இங்கு மேற்கொள்ளப்பட்ட பெரும் சூழ்ச்சி.
அது என்ன தெரியுமா?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னின்று குரல்கொடுத்தவர்கள் வரிசையில் யூலி என்ற பெண்ணும் தமிழச்சி என்ற பெயரில் மக்கள் மத்தியில் வலம்வந்த நபர்.
அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழர்களின் உருவாக்கவே அவர் அவ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் காணப்பட்டார்.
அப்படிப்பட்ட ஒருவரின் மீது தவறான கண்ணோட்டத்தை கொண்டுவருவது என்பது ஒட்டுமொத்த தமிழர்களினையும் உலக மக்கள் பார்வையில் தவறாகவே காண வைக்கும்.
அதன் அடிப்படையில் பணத்திற்கு அடிமையாகி அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய யூலி சூழ்ச்சியின் துணையால் தோற்கடிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழர்களை முட்டாளாக்க அவர்கள் கையாண்ட வழி ஓவியா என்ற நடிகையை எல்லோர் மனதிலும் நல்லவளாக பதியவைத்து யூலி என்ற தமிழ் பெண்ணை தமிழர்கள் மத்தியில் கூட தவறான பெண்ணாகவே கருத வைத்தார்கள்.
எனது சில கேள்விகள்
1 . பிரபலங்கள் என்ற பெயரில் போராட்டக்காரர்களை மையப்படுத்தியது ஏன் ?
2. 24 மணித்தியாலங்களில் குறிப்பிட்ட சிலமணி நேரங்கள் மட்டுமே ஒலிபரப்பாக்கப்பட்டது மிகுதி நேரங்களில் ஏன் யூலி கூறியது போல் தவறுகள் நடந்திருக்க கூடாது?
3. காதல் என்பது எல்லா மனிதர்களும் மதிக்கும் ஓர் விடயம் அந்த வகையில் ஓர் சினிமாவைப் போலவேஅவர்கள் அங்கே நடித்திருந்தார்கள் இது மக்கள் மத்தியில் ஓவியாவை உயர்வாக காணவைத்தது . ஆனால் அதே காதல் என்பதை ஆயுதமாக்கியே யூலி என்ற பெண் அங்கே ஏமாற்றப்பட்டு அவமதிக்கப்பட்ட தருணங்களை இறுதியாக யூலி வெளியேறும் போது ஒளிபரப்பு செய்துகாட்டி யூலியை இறுதி தருணத்தில் கூட அவமதித்தது ஏன் ?
4. இறுதி நாள் கமல் யூலியிடம் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து வினவ காரணம் என்ன ?
இவ்வாறான விடயங்களை சற்று மனதில் நிறுத்தி சிந்தித்து பாருங்கள் . ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிராக இந்த நிகழ்ச்சியில் நடாத்தப்பட்ட சூழ்ச்சி உங்களுக்கே புரியும்.
ஒட்டுமொத்தத்தில் தமிழர்களை வீழ்த்த நடிகர்களை ஆயுதமாக்கி நடாத்தப்பட்ட நாடகத்தில் யூலி என்ற பெண்ணை இலக்காக்கி ஒட்டுமொத்த தமிழர்களது போராட்டக் கொள்கைகளும் பயனற்றதாக்கி தமிழர்களை அவமதிப்பதில் வெற்றிகண்டது BIG BOSS என்ற நிகழ்ச்சி
செய்தி ஆசிரியர்
ஞா. நிரோஜன்
செய்தி ஆசிரியர்
ஞா. நிரோஜன்

Tamizhanuku tamizhanae ethiri...
ReplyDelete