அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் - கிரிஷாந்தி
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் ஸ்ரீலங்காவைப் பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண் மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட,கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்
அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக இருந்த போது ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போரின் காரணமாக புலம்பெயர்ந்து சென்று அவரது குடும்பத்தினர் மேரிலாந்தில் குடியேறினர்
இந்நிலையில் பல உயர் பதவிகளை வகித்த கிரிஷாந்தி, மேரிலாந்தின் ஆளுநருக்காக தான் போட்டியிடுவது குறித்து அண்மையில் அறிவித்துள்ளார்
2018 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் முதல் பெண் கிரிஷாந்தி என்பது குறிப்பிடத்தக்கது

No comments