எச்சரிக்கை:- குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டம் : பகிர்ந்துகொள்ளவும்.
திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குழந்தைகளை குறிவைத்து கடத்தும் மர்ம கும்பல் சுற்றி வருவதாக தகவல்
அக்கும்பலில் பெண்கள் அதிகம் இருக்கின்றனராம். இன்று மாலை திருப்பத்தூர் அடுத்த தாமுலேரிமுத்தூரில் ஒரு பெண்மணியை மக்கள் மடக்கி பிடித்து தரும அடி கொடுத்து அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார்கள் எனவும் (ஒளிப்படம் பார்க்க), காவல்துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
தகவல் உறுதிப்படுத்தமுடியவில்லை . இருந்தாலும் பெற்றோர்களின் கவனத்திற்கு...
1) பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியில் தனியாக அனுப்பவேண்டாம்
2) தனியே பள்ளி செல்லும் குழந்தைகளை நீங்களே கொண்டு பள்ளியில் விட்டு மீண்டும் பள்ளி முடிந்ததும் அழைத்து வரவும்
3) பள்ளிக்கு பேருந்தில் செல்லும் குழந்தைகளை பேருந்து நடத்துனரிடம் உறவினர்கள் என கூறி யாரேனும் வந்தால் அவர்களுடன் அனுப்பவேண்டாம் என கூறவும்
4) சுற்றி திரியும் அந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து களையெடுக்கும் வரையில் சற்றே கவனமாக இருக்க வேண்டும்
5) உங்கள் பகுதியில் சந்தேகிக்கும்படி யாராவது நடமாடினால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவும்
6) இப்பகுதிகளில் உள்ள பள்ளிகளின் நிர்வாகத்தினர்கள் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை செய்யவேண்டும்.
இதுகுறித்து நண்பர்கள் யாருக்காவது தகவல் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்.

No comments