பிறந்தநாளை இப்படியும் கொண்டாடும் சில உள்ளங்கள் - வாழ்த்துக்கள் சகோ தீபன்
இன்றைய இளம் சமூகம் பல சமூக சீரழிவுகளை தம் வாழ்வின் ஆதாரமாக்கி வாழ்ந்துவரும் இந்த காலகட்டத்தில் இவ்வாறான சிலரது வாழ்க்கை முறை உண்மையில் வரவேற்கப்படவேண்டிய ஓர் விடயமே.
கொண்டாட்டங்கள் விழாக்கள் என்ற எதுவாக இருந்தாலும் தற்போதைய சமூகம் போதையை நாடிச் செல்வத்தையும் உணவு விடுதிகளில் நண்பர் கூட்டத்துடன் விலை உயர்ந்த உணவினை கொடுத்து தமது பிறந்தநாளை கழிக்கவே பலரும் முயலும் இந்த காலத்தில் ஓர் சமூக சேவை நிலையத்தை நாடிச்சென்று தம்மிடமுள்ள சிறுதொகைப் பணத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவக்கூடிய பொருட்களை அந்த கழகங்களுக்கு நன்கொடையாக கொடுக்கும் இவ்வாறான கொண்டாட்டங்கள் உண்மையில் எதிர்கால சமூகத்தின் மாற்றத்திற்கான விதை என்றே கூறமுடியும்
தமிழ் யாழ் சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

No comments