நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்..! புதிய இந்தியா பிறந்தது…!!

மருத்துவமனையில் அனுமதி மறுப்பு. நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண் 


உத்தரபிரதேசம் மாநிலம் மனு மாவட்டத்தில் உள்ள ஐலாக் கிராமத்தை சேர்ந்தவர் வசுந்தரா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. எனவே ஆம்புலன்ஸ் மூலம் கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டடார்.
போகும் வழியில் அவருக்கு வலி அதிகமானது. மேலும் ஆஸ்பத்திரி வாசலை ஆம்புலன்ஸ் நெருங்கிய உடனேயே பிரசவ நேரம் நெருங்கியதால் வசுந்தரா தீவிர வலியால் துடிக்க ஆரம்பித்தார்.

மருத்துவமனை ஊழியர்களை அழைத்தபோது அவர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் அனைவரும் டீ அருந்த சென்று விட்டார்கள்.அவர்கள் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என்று கூறி விட்டார்கள். இதனால் மருத்துவமனை முன்பே நடுரோட்டிலேயே வசுந்ததாவுக்கு பிரசவம் நடந்து விட்டது. இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதன்பிறகு வசுந்தரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊழியர்களின் அலட்சியத்தால் நடுரோட்டிலேயே பெண் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.