100 கோடி செலவில் அபிவிருத்தி : பலாலி விமான நிலையம்
பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் ஓய்ந்து 8 வருடங்கள் நிறவைடைந்து விட்ட நிலையிலும்,வலிகாமம் வடக்கு அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டுவரும் நிலையிலும், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையிலும், மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு அரச வட்டாரங்களை மேற்கோள் காட்டி நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலாலி பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்கள் இருக்கும் நிதிய கொண்டு இதனை முழு அளவிலான பிராந்திய விமான நிலையமாக மாற்ற வேண்டும் என வானூர்தி அதிகார சபையின் இயக்குனர் நாயகம் நிமால்சிறி தெரிவித்துள்ளார்.
குறித்த விமான நிலைய அபிவிருத்திப் பணிகளுக்கு இந்திய அரசின் நிதிப் பங்களிப்பு கோரப்பட்டுள்ள போதிலும், விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments