எச்சரிக்கை : மின்விசிறியில் மின்சாரம் பாய்ந்து 6மாத குழந்தை, தாய் பரிதாப மரணம்!!!!

சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் சிவா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அருணா. இவர்களது மகள்கள் கீர்த்தனா (5), கீர்த்தி (3), மகன் திவான் (6 மாதம்). நேற்று இரவு 4 பேரும் தூங்கி கொண்டு இருந்தனர்.

அருணா தனது அருகில் குழந்தை திவானை வைத்தப்படி தூங்கினார். அவரது அருகில் டேபிள் மின்விசிறி வைத்து இருந்தார். அதில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் அருணாவின் கை மின்விசிறி மீது பட்டது. உடனே அவர் மீதும், குழந்தை மீதும் மின்சாரம் பாய்ந்தது.

அருகில் படுத்து இருந்தவர்கள் நன்றாக தூங்கி கொண்டு இருந்ததால் அவர்களுக்கு தெரியவில்லை. மின்சாரம் தாக்கியதில் அருணாவும், குழந்தை திவானும் உயிரிழந்தனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.