7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிற்றப்பன் : வேடிக்கை பார்த்த தாய் - பருத்தித்துறை



யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிற்றப்பன் உட்பட அதை வேடிக்கை பார்த்த பெற்ற தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (25) காலை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சிற்றப்பனால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளன சிறுவன் 7 வயதுடையவராவார்.தவறு ஒன்று செய்ததாக கூறி சிறுவனை தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். .இதன் போது சிறுவனின் தாயாரும் இதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிறுவனின் தாயாரும் சிற்றப்பனும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.