முடிவுக்கு வருமா ரோஹிங்கியோ முஸ்லிம்களின் அவலங்கள்...!!!

ரோஹிங்கியோ முஸ்லிம்களைத் தனித்து விடமாட்டோம். நிச்சயம் அவர்களின் பிரச்சினை முடிவுக்கு வரும் – எர்துகான்

ரோஹிங்கியோ முஸ்லிம்களுக்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளும், உலகின் அனைத்து இஸ்லாமியர்களும், மனிதநேயத்தை மதிக்கும் அனைத்து மக்களும் உதவி செய்ய வேண்டும் – டாக்டர் யூசுப் அல்கர்ளாவி வேண்டுகோள்
துருக்கி முழுவதும் செவ்வாய், புதன் கிழமை (29, 30.08.2017) களில் ரோஹிங்கியோ முஸ்லிம்களைக் காத்திட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
கடந்த வாரம் பர்மா ராணுவத்தினரால் கொல்லப்பட்ட 3000 ரோஹிங்கியோ முஸ்லிம்களுக்கு துருக்கி முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் காயிப் ஜனாசா தொழுகை.
இவ்வருட ஹஜ் பெருநாள் செலவீனங்களைக் குறைத்து ரோஹிங்கியோ முஸ்லிம்களுக்கு உதவிகளை அனுப்புமாறு துருக்கியின் மார்க்க விவகாரத்துறை அறைகூவல்.
ரோஹிங்கியோ முஸ்லிம்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பொதுச்செயலாளருடன் எர்துகான் தொலைபேசியில் உரையாடல். களத்தில் இறங்குகின்றது ஐ.நா. சபை.
மலேசியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், கத்தார் நாடுகளுடன் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை. துருக்கி வந்தார் மலேசியா வெளியுறவுத்துறை அமைச்சர்.
பாலஸ்தீனப் பிரச்சினையைப் போன்று ஐ.நா. சபையில் இப்பிரச்சினையை எழுப்ப இருக்கின்றது கத்தார்.
ரோஹிங்கியோ முஸ்லிம்களுக்கு அனைத்துவிதமான மனிதநேய உதவிகளையும் கத்தார் அனுப்ப உள்ளது – கத்தார் 
வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான்.
அமெரிக்கா, ரஷ்யா ஒத்துழைப்புடன் துருக்கி, மலேசியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் நாடுகளுடன் இணைந்து ரோஹிங்கியோ முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திட இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியது துருக்கி.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.