திருட முயன்ற ஆசாமி : வெளுத்துவங்கிய மக்கள் பருத்தித்துறை வீதியில் சம்பவம்

பருத்தித்துறை –யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து பகல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் நேற்று (13) மதியம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட முற்பட்ட சமயம் குறித்த நபர் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். பிடித்த இளைஞனை அப் பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். கைதான இளைஞன் பொம்மை வெளிய பகுதியினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நையப்புடைக்கப்பட்ட இளஞன் மேலதிக விசாரணையின் பொருட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.