கல்கிஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை விரட்டியடித்த கோரம்
முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதாகக் கூறும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடமே இது விடயத்தில் ஏன் மெளனம்?
இன்று காலை கல்கிஸையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது விடயத்தில்கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த அவலைகளின் பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் அவல நிலைக்கு குரல் கொடுப்போம் என மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட அக்கட்சியின் உயர்பீடம் ஏன் இப்படியான முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கவலையான நிலைக்கு உடனடியாக குரல் கொடுக்க முடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..



No comments