சாரதிகளே எச்சரிக்கை : மது அருந்திய சாரதிகளை அடையாளம் காணும் சுவாச பரிசோதனை குழாய்கள் இலங்கையிலும்

மது அருந்திய சாரதிகளை அடையாளம் காணும் நோக்கிலான எல்கோலைசர் டெஸ்ட் (சுவாச பரிசோதனை) குழாய்கள் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சுமார் 90,000 குழாய்களை 486 பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.


No comments

Theme images by mammuth. Powered by Blogger.