மனத்தைத் தொட்ட காதல் காவியம் - வாழ்ந்துகொண்டு காதலை வாழவைத்த காதலர்கள்



ஜெயப்பிரகாஷ்.இவருக்கும் பள்ளிப் பருவத் தோழியான சுனிதாவுக்கும் படிக்கும்போதே விருப்பம். காதலைத் தெரிவித்துக்கொண்டதில்லை.
.
இருவரும் பிரிந்தும் சென்றுவிட்டனர்.
.
சுனிதா, கோவையில் வசித்து வந்தார். ஜெயபிரகாஷுக்கு சுனிதா மீது கட்டுக்கடங்கா காதல். பிரிந்தாலும் அவ்வப்போது தொடர்புகொள்வார்கள். பெரியதாக பேசிக்கொள்ள மாட்டார்கள். பரஸ்பரம் நலம் மட்டுமே விசாரித்துக்கொள்வார்கள். அத்துடன் பேச்சு முடிந்துபோகும்.
2011-ம் ஆண்டில் ஒரு விபத்தில் . சிதைந்துபோன முகம், மழுங்கிய தலை, சுருங்கிப்போன கண்கள் என சுனிதா உருக்குலைந்து கிடந்தார். கோலவிழிப் பார்வையால் ஜெயப்பிரகாஷின் மனதை கொள்ளைகொண்ட சுனிதாவை, ஒரு விபத்து அலங்கோலமாக்கிவிட்டது.

சுனிதாவின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ், வேதனையின் உச்சத்தில் இருந்தார் . 
.

அன்றைய தினமே சுனிதாவை அணுகி, ''நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்'' என்று சொல்ல, சுனிதா எந்தப் பதிலும் சொல்லவில்லை.. சின்னப் புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
.
அதன் பிறகு, சுனிதாவைவிட்டு ஜெயபிரகாஷ் பிரியவே இல்லை. இரு வருடங்கள் தன் பக்கத்திலேயே வைத்து, குழந்தைபோல பார்த்துக்கொண்டார். பல சிகிச்சைகளுக்குப் பிறகு, சுனிதா ஓரளவுக்கு உடல் நலம் தேறினார். அற்காகவே ஜெயபிரகாஷ் லட்சக்கணக்கில் பணம் செலவழித்தார். இரு வருடங்கள் கழித்து 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 
.
இந்தத் தம்பதியின் மகிழ்ச்சியான இல்வாழ்க்கைக்கான இனிய சான்றாக அத்மியா, அத்மிக் என இரு குழந்தைகள் பிறந்தனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.