ஆறு மாத குழந்தையோடு, தாய் தற்கொலை



டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது ஆறு மாத குழந்தையோடு, தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவரின் மனைவி அன்பு கொடி (28),  மகள் சர்மிளாஸ்ரீ(9). இந்த தம்பதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு சர்வீன் என்ற ஆண் குழந்தை  பிறந்தது. 

அந்நிலையில், சர்வீன் சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சர்வீனை பரிசோதித்த போது, அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதை கண்டு அன்பு கொடி, மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். 

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் தனது குழந்தையுடன் வெளியே வந்த அன்பு கொடி, தனது வீட்டிற்கு உள்ள ஒரு கிணற்றில் குதித்தார். அதில், தாய் மற்றும் குழந்தை இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

அந்த கிணற்றின் பக்கம் அதிகாலை வந்த பொதுமக்களில் சிலர், அன்பு கொடி மற்றும் சர்வீனின் ஆகியோரின் உடல் நீரில் மிதப்பதைக் கண்டு, அவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் அவர்களின் உடல் மீட்கப்பட்டு, பிரேதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.