மானிப்பாயில் மாட்டியது ஹெரோயின்! இரு யுவதிகள் உட்பட நால்வர் கைது!!



யாழ்ப்பாணம் மானிப்பாயில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.என்.டி.நாலக்க ஜெயவீர தெரிவித்துள்ளார்.
கைதான நால்வரும், யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் இருவர் 26 வயதுடைய யுவதிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அறிந்து கொண்ட இரகசிய பொலிஸார், தாமும் ஹெரோயின் வாங்குவது போல் பாசங்கு செய்து சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

அத்துடன் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10கிராம் அளவிளான 20மேற்பட்ட சிறுமுடிச்சுக்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளினை கைப்பற்றியுள்ளனர்.



மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் இருந்து, யார் விற்பனைக்கு வழங்கியிருந்தார்கள் என்பது தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.