பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வாழ்த்து

நாளை ஆரம்பமாகவுள்ள 2017 கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர் கொண்டு தமது எதிர்கால இலக்கை அடைய வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை 5116 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

688இ573 பரீச்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இன்று காலை கல்வி அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் பரீட்சை வெற்றிகரமாக இடம் பெறுவதற்கு தற்போது அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் செய்துள்ளது.

இதே போன்று nது பரீட்சைகள் சட்டவிதிகளுக்கு அமைவாக அனைத்து பரீச்சாத்திகளும் செயற்படவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ரயில் போக்குவரத்து பிரச்சனை ஏற்படுமாயின் குறித்த நேரத்திற்கு முன்பதாக பரீட்சை மத்திய நிலையங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுகொண்டார்.
Theme images by mammuth. Powered by Blogger.