யாழ்.போதனா வைத்தியசாலையில் விஷ ஊசி செலுத்தி 3 மாதக் குழந்தை கொலை! ஒப்புக்கொண்டார் வைத்தியர்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் விஷ ஊசி செலுத்தி மூன்று மாதக் குழந்தை கொலை! ஒப்புக்கொண்டார் வைத்தியர்!
சில தினங்களுக்கு முன்னர் கரவெட்டி வடக்கு ஆண்டார் வளவைச் சேர்ந்த நிரோசன் அஷ்மிலன் என்ற மூன்று மாதப் பாலகன் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் விஷ ஊசி செலுத்தப்பட்டதால் பலியாகியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சுகயீனம் காரணமாக பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலைக்கு பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பாலகன் நோயின் தாக்கத்தால் அவதியுற்றதால் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையிலிருந்து இரவு 9 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த பாலகன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பரிசோதிக்கப்பட்டு இரவு 10 மணியளவில் நோய்க்காக ஊசி ஒன்றும் வைத்தியரால் ஏற்றப்பட்டுள்ளது.
ஊசி எற்றப்பட்ட ஒருமணி நேரம் கழிந்த நிலையில் பாலகனின் உடல் நீல நிறமாக மாறியதை அடுத்து தாய் பாலகனின் நிலைமை குறித்து தகவல் தெரிவித்து வைத்தியரை வரவழைத்து சிகிச்சையளிக்குமாறு கோரியுள்ளார்.
தாதியும் குழந்தையின் உடல் மாற்றத்தை அறிந்துகொண்டு வைத்தியரிடம் தகவலை தொலைபேசியூடாக தெரிவித்து சிகிச்சை அளிக்குமாறு கோரியுள்ளார். ஆனால் குறித்த வைத்தியர் தான் நித்திரை கொள்வதாகவும் எதுவானாலும் காலையில் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து தொலைபேசியை நிறுத்தியுள்ளார்.
இரவு 10 மணியளவில் பாலகனின் உடல் முழுமையாக நீல நிறமாக அதாவது நஞ்சு உடல் முழுவதும் பரவி ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது. மறுநாள் காலை வழமையான மருத்துவ பரிசோதனைக்காக வந்த வைத்தியர் பாலகனின் பரிதாபமானதும் ஆபத்தானதுமான நிலையை அறிந்துகொண்டு உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சோதிக்கப்பட்டார்.
ஆனாலும் அந்த பாலகன் அந்தச் சந்தர்ப்பத்தில் உயிரற்ற நிலையிலேயே இருந்த போதிலும் கண்துடைப்புக்காக மேலதிக அதிதீவிர சிகிச்சைகள் மேற்கொள்வதாக கூறி யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தாம் விஷ ஊசி செலுத்தி பாலகனை கொன்ற சம்பவத்தை மறைக்க முயற்சித்துள்ளனர்.
மேலும் குழந்தை இறந்ததற்கு காரணம் தாயின் பாலில் இருந்த வைரஸ் கிருமி என்றும் தெரிவித்து தமது சட்ட வைத்திய சான்றிதழை கொடுத்து பாலகனின் உடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தமது குழந்தை தாய்ப்பாலில் இருந்த வைரஸ் கிருமியால் பலியாகவில்லை என்பதை உறுதி செய்த தாயார் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தமது மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டிருந்த நிலையில் தாயின் உடலிலோ அன்றி பாலிலோ வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாலகனின் உடலத்தை பிறிதொரு வைத்தியரின் உதவியுடன் உடற்கூற்று பரிசோதனையை பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனையின் பிரகாரம் பாலகனுக்கு தவறுதலாக ஊசி மாற்றி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அது விசமானதாலேயே இறந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து குறித்த வைத்தியர் மீது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்பிரகாரம் குறித்த விடயம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திட்டமிட்டு தமது பரிசோதனைகளுக்காக பல உயிர்களை குறிப்பாக பல பாலகர்களது உயிர்களை அண்மைய காலங்களில் பலியெடுத்துவந்திருந்தமையும் இதனை பாதிக்கப்பட்ட தரப்பினர் வெளிக்கொண்டுவந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தவறான தகவல் என்று கூறி பாதிக்கப்பட்டவர்களையும் ஊடகங்களையும் முட்டாள்களாக்கி மூடிவந்ததும் யாவரும் அறிந்ததே.
ஆனால் குறித்த சம்பவம் இன்று அந்த மூடிமறைப்புக்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன் உண்மை நிலையையும் வெளிக்கொண்டுவந்துள்ளது.
மக்கள் தமது உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக கடவுளைப் போல நம்பும் வைத்தியர்கள் தமது பணத்தாசைகளால் பகல் இரவு பாராமல் தனியார் வைத்தியசாலைகளில் சேவைசெய்துவிட்டு அரச சலுகைகளையும் ஆடம்பர வாகனங்களையும் பெற்றுக்கொண்டு அப்பாவி மக்களை குறிப்பாக அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை மேற்கண்டவாறு ஏமாற்றி வருகின்றனர்.
மக்களே அவதானம் உங்கள் உயிர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொன்றுவிடும் எச்சரிக்கையாக இருங்கள்.
No comments