எச்சரிக்கை ! பொது இடங்களில் குப்பை கொட்டினால் கைது.
பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்யும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பலர் பொது இடங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே அமைச்சர் பொலிஸாருக்கு மேற்கண்டவாறு பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments