காவல்துறையும் இராணுவமும் எமது கட்டுப்பாட்டில் – மங்கள

காவல்துறையும் இராணுவமும் தமது அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தானே இலங்கையின் பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியே அரசாங்கத்தை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் காவல்துறையும் இராணுவமும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை எத் தெரிவித்துள்ள அவர் சட்டம் ஒழுங்கு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.