நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் வருடாந்த மஹோற்சவம் 25ம் திகதி ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழா ஜூலை 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் சிவபூசைக் கைலைக் காட்சியும், இரவு திருமஞ்சத் திருவிழாவும், 13 ஆம் திருவிழாவான 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கைலைக் காட்சியும், இரவு சப்பறத் திருவிழாவும், நடைபெறும்.
08 ஆம் திகதி சனிக்கிழமை காலை இரதோற்சவமும், 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் மறுநாள் திங்கட்கிழமை இரவு பூங்காவனம், தெப்போற்சவம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

Theme images by mammuth. Powered by Blogger.