மக்கா மேடையில் ஏறி பொய்யுரைக்கும் ஸுதைஸிக்கு ஸல்மான் நத்வி எச்சரிக்கை.

 முஹம்மத் பகீஹுத்தீன் –
மக்கா ஹரம் ஷரீப் மின்பர் மேடையில் ஏறி பொய்யுரைக்கும் ஸுதைஸிக்கு ஸல்மான் நத்வி எச்சரிக்கை.

அப்துல் ரஹ்மான் ஸுதைஸியே! நீர் புனித ஹரத்தின் வெள்ளி மேடையை பயன்படுத்தி சதிகார்களையும், துரோகிகளையும், கொலைகாரக் கும்பல்களையும் சர்வாதிகார ஆட்சியாளர்களையம் பாதுகாத்து இரவு பகலாக துதி பாடுகிறீர். என்ன கொடுமை இது?
எவ்வளவு அபத்தமான பேச்சு! அப்பாவி முஃமின்களை வீணாக குற்றம் சுமத்துகிறீர். மாபெரும் பொய்யுரையின் மூலம் புனித ஹரத்தையே மாசுபடுத்துகிறீர்.
அநியாயக்கார ஆட்சியாளர்களின் முகத்திரை கிழிந்துள்ளது. அவர்களின் வேஷம் களைந்துள்ளது. கோடாரிக்காம்புகளான அந்த ஆட்சியாளர்களை மக்கள் வெறுத்துள்ளனர். ஆனால் நீர் அவர்களுக்காக வாதாடுகின்றீர். நாளை மறுமையில் உனக்காக அல்லாஹ்விடம் யார் வாதிடப்போகின்றார்.!?
ஆழகான குரல், இனிமையான ஓதல், இதமான வார்த்தைகள், உள்ளம் உருகும் பிராத்தனைகள் உனது நாவசையும் போது நாம் எதிர்பார்ப்போடு செவிமடுத்தோம். ஆனால் அந்த நாவு அநீதிக்கு ஒத்தோடும் என்று நாம் நம்பவே இல்லை. இன்று உன் குரல் கேட்கும் போதே கோபமும் வெறுப்பும் பொத்துக்கொன்று வருகிறது.
அல்லாஹ்வின் மீது ஆணையாக கேட்கிறேன் முர்ஸி ஒரு பயங்கரவாதியா? முஹம்மத் பதீஉ ஒரு பயங்கரவாதியா? கர்ளாவி ஒரு பயங்கரவாதியா? சர்வதேச உலமா சபை பயங்கரவாத அமைப்பா? முஹம்மத் அரீபி, ஸல்மான் அவ்தா, ஆயிழ் கர்னி இவர்கள் பயங்கரவாதிகளா? படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள், சிறையில் வதைக்கப்படும் முஸ்லிம்கள், ராபியாவில் கொழுத்தப்பட்டோர் இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா?
உமது பார்வையில் சியோனிசத்தின் அடிவருடியான எகிப்துப் படைதானா பாதுகாப்பையும் அமைதியையுடம் கொண்டுவரும்?
நோன்பாளிகளை பஜ்ர் வேளையில் கொலை செய்த ஸீஸீயின் படைகளா அமைதிகாக்கும்?
கிப்திகளும், இஸ்ரேலும், சிலுவையின் மைந்தர்களும் தானா எகிப்துக்கு அமைதியையும், பாதுகாப்பையும் சௌஜன்யத்தையும் வழங்கும்? உமது பார்வையில் சியோனிச யூதர்கள் முஸ்லிம்களை விட உயர்ந்தவர்களா?
உமது குத்பாவிற்கு காது கொடுத்து கேட்டதன் பின்பு தான் புரிந்து கொண்டேன் கயவர்களின் ஊதுகுழாக நீர் உள்ளீர் என்று.
ஸுதைஸியே அல்லாஹ்வை பயப்படமாட்டீரா? உம்மை பூமி உள்வாங்கி விழுங்கிவிடும் என்பதையிட்டு அச்சமில்லையா? அல்லாஹவின் கோபம் பிடித்துக் கொள்வதையிட்டு பயப்படுவதில்லையா? நீர் அல்லாஹ்வின் திருப்தியைத் தானா எதிர்பார்க்கின்றீர்? அல்லது அநியாயக்கார சர்வாதிகளை திருப்தி படுத்துவதில் தானா இன்பம் காண்கின்றார்? யார் திருப்தி உனக்குத் தேவை?
மக்கள் உம்மை விரும்பினர். உமது குத்பாவை விரும்பினர். உமது இமாமத்தை விரும்பினர். தராவீஹ் தொழுகையில் உமது துஆவை விரும்பினர். இன்று அதே மக்கள் உன்னை வெறுக்கின்றனர். படைத்த ரப்புக்கு எதிராக ஹரம் ஷரீபிலேயே உனது துணிவு எமது மக்களை கோபம் கொள்ளச் செய்துள்ளது.
புனித ஹரம் உன்னைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறது. படைத்தவனிடம் அபயம் கேட்கிறது. அறிந்து கொண்டே சத்தியத்தை மறைப்பவனுக்காக சபிக்கிறது, உம்மிடம் இருப்பவை முடிந்து விடும். அல்லாஹ்விட முள்ளவை ஒருபோதும் முடிவதில்லை.

இப்படிக்கு,
ஸல்மான் நத்வி
இந்திய உபகண்ட உலமா சபையின் பிரதிநிதி
Theme images by mammuth. Powered by Blogger.