திணைக்கள தொடர்சியான வேலை நிறுத்தம் 3வது நாளாக இன்றும் தொடர்கின்றது
26-06-2017நள்ளிரவு 12.00 மணி முதல் ஆரம்பமான தபால் திணைக்கள தொடர்சியான வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கின்றது
- நுவரெலியா , கண்டி , காலி கோட்டை ஆகிய இடங்களில் தபால் அலுவலகங்களில் சுற்றுலா துறை ஹோட்டல்கள் ஆரம்பிக்கும் திட்டத்தினை உடன் நிறுத்த வேண்டும்
- திணைக்களத்தின் தொழில் சட்ட யாப்பை திருத்தியமைத்து செயற்படுத்துதல் உட்பட்ட முன்வைக்கப்பட்ட நிர்வாக பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
- கொழும்பு பிரதம தபாலகத்தினை ஜனாதிபதி மாவத்தையில் உள்ள அவ் அலுவலக கட்டடத்திலே உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றுவரும் தபால் திணைக்கள ஊழியர் போராட்டம் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையோடு இன்றும் தொடர்கின்றது.
