அவைத்தலைவரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்தது சட்டத்திற்கு முரணான விடயம்
அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்திருந்தார்.
இந்த விடயம் சட்டத்திற்கு முரணான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதாக இருந்தால் அவைத்தலைவரிடமே கையளித்திருக்க வேண்டும்.
எனினும், அதற்கு மாறாக முதலமைச்சருக்கு எதிராக அவைத்தலைவரே நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்திருந்தார். அத்துடன், பிரதி அவைத்தலைவரும் அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில், அவைத்தலைவர் மீது பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
