சுதுமலையில் வாடகைக்கு வந்திருந்த கள்ள காதலர்கள் குறித்த பெண்ணின் மகனால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம்
உரும்பிராயை வதிவிடமாக கொண்ட ஒருவர் தனது மனைவியை 1 வருடமாக பிரிந்து வாழ்ந்துள்ளார். ஏனெனில் அவரது மனைவி வேறு ஒரு நபருடன் கள்ள தொடர்பு கொண்டு தனது 4 பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ள காதலனுடன் சென்றுவிட்டார்
பிள்ளைகளில் மூத்த மகனுக்கு 25 வயது 2ண்டாவது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது மிகுதி இருவரும் கல்வி கற்கின்றனர்.
இந்த தருணத்தில் அந்த பெண் தனது வீட்டில் இருந்த பிள்ளைகளின் நகை பணம் எல்லாவற்றையும் எடுத்து சென்றது குறிப்பிடத்தக்க ஓர் விடயம்.
பின்னர் அந்த பெண்ணும் கள்ள காதலனும் கொழும்பு சென்று அங்கு எல்லா பணத்தையும் முடித்துவிட்டு பின்னர் தன் முந்தைய கணவருடன் தொடர்புகொண்டு தனது வறுமைநிலையை கூற அவரும் இங்கே வாருங்கள் தான் பார்த்துக்கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் வர அவளது முந்தைய கணவரும் அவளை தனது அக்காவின் மகள் என கூறி சுதுமலையில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீட்டில் அவர்கள் இருவரையும் தங்கவைத்து விட்டு இவரும் அடிக்கடி வந்துபோயுள்ளார்
இதனை சிலகாலம் அவதானித்த ஊர் மக்கள் வீட்டு உரிமையாளரிடம் இது பற்றி வினவ அவர்களும் அது அக்காவின் மகள் ஆதலால் துணைக்கு வந்திருக்கலாம் என கூறியுள்ளனர்
ஆனால் இன்று அவர்களது மகன் இருவரையும் கையும் களவுமாக பிடித்து இருவரையும் அடித்து காயப்படுத்தி பிரச்சனை செய்துள்ளார். அப்போதே ஊர் மக்களும் உண்மை அறிந்துள்ளனர். பின்னர் அவர்கள் சுதுமலையை விட்டு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.
மகனது இந்த கோபம் நியாயமானது ஆகையால் எவரும் மகன் தாயை தாக்கும் போது தடுக்கவில்லை