யாழில் போத்தல் தண்ணீர் விலைகொடுத்து வாங்கும் நிலை உருவாக்கியதா ? அல்லது உருவாக்கப்பட்டதா?

உலகில் வேறு எங்கும் அல்லாத சுத்தமான   பருக இதமான குடிநீர் உள்ள மண் யாழ் குடாநாடு என்பது எமது காலத்தில் நாம் கண்ட உண்மை. ஆனால் தற்போதைய நிலை என்ன ?
குடிநீர் பிரச்சனை .அதாவது ஒயில் தண்ணீர் பிரச்சனை யாழ் மக்களது பெரும் பிரச்சனையாக நோக்கப்படுகின்றது. 
இப் பிரச்சனை எப்போது மீறும் பிரச்சனையாக உருவானது என்பதனை எவரும் ஏன் சிந்திக்கவில்லை.


எனது சில கேள்விகளுக்கு பதிலை சிந்தித்து பாருங்கள் அன்பர்களே ....!
  • எமது குடாநாட்டில் தண்ணீர் சுத்தமானதாக கிடைக்கப்பெறும் நிலை இருந்தபோதும் ஏன் எங்கள் மண்ணில் தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யும் கம்பெனிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர்?
  • அவ்வாறான கம்பெனிகள் வந்த பிறகு ஏன் ஒயில் தண்ணீர் பிரச்சனை உருவானது ?
  • ஒயில் தண்ணீர் பிரச்னைக்கு மாற்று ஒழுங்கை ஏற்படுத்திய அரசு ஏன் அதனை முற்றிலுமாக இல்லாதுசெய்யக்கூடிய ஒழுங்கை அமைக்கவில்லை ?
  • கிணறுகள் தண்ணீர் பெறும் இடங்கள் யாவும் அரச அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு அக் கிணறுகளில் ஒருவித இரசாயனம் கலக்கப்பட்டு தண்ணீர் பருக உகந்ததல்ல  என எச்சரித்ததற்கான காரணம் என்ன ?
  • பருக தண்ணீர் உகந்ததல்ல எனின் அந்த பிரச்னையை எவ்வாறு மக்கள் தீர்க்க முடியும் ? ( உயிரை காக்க பயந்து போத்தல் தண்ணீரை மட்டுமே வாங்க வேண்டும் வேறு வழி இல்லை )
  • தண்ணீர் போத்தல் விற்பனையால் அந்த கம்பெனி இப் பிரச்னைக்கு எவ்வளவு லாபம் உழைத்திருக்கும் ?
  • அரசிற்கு வரியாக எவ்வளவு தொகை மக்களால் செலுத்தப்பட்டிருக்கும் ?
  • இன்று நிலை முற்றிலுமாக மாறிவிடத்தை கவனித்தீர்களா ?

எல்லோரும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பருகுவதையே அடிப்படையாக்கிவிட்டார்கள்.
போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது.
மனிதரின் ஆதாரத்தை அழித்து அதை அவர்களுக்கு வியாபாரமாக்கி மக்களை அவஸ்த்தைக்கு உள்ளாக்கும் மனிதர்களை அனுமதித்த அரசு இதற்கான தீர்வையே / தண்ணீர் போத்தல் கம்பெனிகளை இங்கிருந்து விரட்டும் நிலையையோ என்றும் உருவாக்க வாய்ப்பில்லை 
அழிவால் ஆதாயம் காணும் அரசு 
அன்றும் இன்றும் என்றும் .....

ஞா. நிரோயன் 
என் சமூகத்திற்காய் ஒருநிமிடம் 
Theme images by mammuth. Powered by Blogger.