விடுதலைப் புலிகளை விட தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தானது - ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளை விட தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தானது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடு மிகவும் ஆபத்தானது. புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்தது. எனினும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்களவர்களை துரத்தியடிக்கின்றனர். தென்னிலங்கையில் அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருப்பதாக கூறுகின்றது. எனினும், வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்களவர்கள் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Theme images by mammuth. Powered by Blogger.