விமானத்தில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் வசிக்கும் கிறிஸ்டினா பெண்டன் என்ற பெண் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வாரம் அவர் போர்ட் லாடெர்டேல் என்ற விமானத்தில் பயணம் செய்தார்.
அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து அவர் அங்கிருந்த விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தார்.
விமானத்திலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்ததால், அருகிலிருக்கும் ஒரு விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதையடுத்து, கிறிஸ்டினா ஒரு அழகான குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தங்கள் விமானத்தில் அந்த குழந்தை பிறந்ததால், வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தை இலவசமாக பயணம் செய்யலாம் என அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


Theme images by mammuth. Powered by Blogger.