மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி கொடூரமாக தாக்கி படுகொலை
மீண்டும் ஜார்கண்டில் பசு பாதுகாப்பு பயங்கரவாதிகள் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ளனர்
42 வயதுள்ள அலிமுத்தீன் இல்யாஸ் அஸ்கர் அலி என்பவர் பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் தாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாருதி வேன் (WB 02-1791) ல் அஸ்கர் உட்பட மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது அதில் மாட்டுக்கறி கொண்டு செல்வதாக சிலர் வதந்தி பரப்பினர். உடன் மூவரும் பயணித்த வேனை தாக்கிய பசு பாதுகாப்பு தீவிரவாத கும்பல், வேனை தீயிட்டு கொளுத்தியது.
