புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் பகல் கொள்ளையில் ஈடுபடும் வவுனியா வடக்கு பிரதேசசபை.

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா தற்போது நடைபெற்று வருகிறது. குறித்த ஆலயத்திற்கு வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதியிலிருந்தும் பல லட்சம் மக்கள் இந்த ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வது வழமை.
இம்முறை பொங்கல் விழா தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் தற்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உந்துருளிகள்,மகிழுந்து,பேரூந்து போன்ற வாகனங்களில் ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் வாகனங்களுக்கான வாகன பாதுகாப்பு நிலையங்களை வவுனியா வடக்கு பிரதேச சபையினர் செய்து வருகின்றனர். ஆலயத்திற்கு வரும் வாகனங்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் உந்துருளிகளுக்கு 50 ரூபாவும் ஏனைய வாகனங்களுக்கு இதை விட பல மடங்கு அதிகரித்த பணத்தையும் வசூலித்து வருகின்றனர்.
உந்துருளி பாதுகாப்புக்கு என ஒருவரிடமிருந்து 50 ரூபாவை அறவிடும் பிரதேச சபை உந்துருளிகளுக்கு எந்த பாதுகாப்பும் வழங்குவதில்லை. குறிப்பாக உந்துருளிகளை வெறும் பொட்டல் வெளியிலேயே விடும்படி கூறுகின்றனர்.அது மட்டுமன்றி தலைக்கவசங்களை உந்துருளியில் வைக்கவேண்டாம் எனவும் அறிவுத்துகின்றனர். புதிதாக காடு வெட்டபட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு நிலையத்தில் முட்கள் அதிகமாக காணப்படுகிறது. சில வேளை உந்துருளிகள் காற்றுப்போனால் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள A9 சாலைக்கே செல்லவேண்டும். இவ்வாறான சூழலில் பாதுகாப்பு என்ற பெயரில் பலமடங்கு பணத்தை பொது மக்களிடமிருந்து அபகரித்து வருகின்றனர்.

Theme images by mammuth. Powered by Blogger.