நாகபூசணியைத் தரிசிக்க விசேட ஏற்பாடு- காரைநகர் - நயினாதீவு

நாகபூசணியைத் தரிசிக்க விசேட ஏற்பாடு-
காரைநகர் - நயினாதீவு
படகுச் சேவை ஆரம்பம்
நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், பக்தர்களின் வசதி கருதி காரைநகரில் இருந்தும் படகுச்சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் இந்தப் படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடக்கம் பெருந்திருவிழா நிறைவடையும் வரை பக்தர்கள் இந்தப் படகுச் சேவை மூலம் ஆலயத்திற்கான போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.
காரைநகரில் இருந்து தினமும் காலை 9.00 மணிக்கு நயினாதீவை நோக்கிப் புறப்படும் படகு நயினாதீவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மீண்டும் காரைநகருக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Theme images by mammuth. Powered by Blogger.