போர் மூளும் அபாயம்; இந்திய பெருங்கடலில் சீனாவின் 13 போர்க்கப்பல்கள்
இந்தியா – சீனாவுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்களை சீனா குவித்து வருகிறது. இது வரை 13 போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் செயற்கை கோள் படத்துடன் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்திய கடற்படையும் உஷார்படுத்தப் பட்டுள்ளது.
சிக்கிம் எல்லையில் உள்ள டாக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை சீனா தொடங்கியதில் இருந்தே இந்தியா - சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இதனால் பதட்டமான சூழல் நிலவுகிறது. இரு நாடுகளுமே அத்துமீறிய தாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன .
சீனா தனது எல்லைகளை காத்துக்கொள்ளவும், தனது மதிப்பை நிலைநிறுத்திக்கொள்ளவும் அனைத்து வகை நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் சுவாங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனும், பூடானுடனும் சீனா நல்ல உறவை பராமரிக்கவே விரும்புகிறது. பூடானை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சீன எல்லைக்குள் இந்திய ராணுவம் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.சீனா சாலை அமைப்பது அத்துமீறல் அல்ல. சட்டப்பூர்வமான நடவடிக்கையே என்றும் அவர் எச்சரித் துள்ளார்.
இதற்கிடையில் இந்தியப்பெருங்கடல் பகுதியில் வழக்கத்துக்குமாறாக சீன போர்க்கப்பல்கள் நிறுத் தப்பட்டுள்ளன. 13 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள தாக இந்திய கடற்படை செயற்கை கோள் மற்றும் கடலோர கண்காணிப்பு விமானங்கள் தகவல் அளித்துள்ளன. இதையடுத்து இந்திய போர்க்கப் பல்களும் தீவிரமாக கண்காணித்து வருவதாக டெல்லியில் வரும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இரு நாடுகள் இடையே எழுந்துள்ள சாலை பிரச்னை குறித்து தூதரகம் மூலமாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் தீர்வு காணப்படும் என்றும் டெல்லி அதிகார வட்டாரங்கள் கூறின.
அதே சமயத்தில் சிக்கிம் எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு வருகிறார் கள். எதையும் சமாளிக்கும் வகையில் இந்தியப் படை பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன
இதற்கிடையில் இந்தியா, சீனா இடையேயான பிரச்சினையை சரியான முறையில் கையாளாவிட்டால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளலாம் என்று சீன பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
